Editorial / 2018 மே 15 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காவிரி நதிநீரைப் பகிர்வது தொடர்பாக முகாமை செய்வதற்காக செயற்றிட்டத்துக்கான வரைவை, இந்திய மத்திய அரசாங்கம், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நேற்று (14) தாக்கல் செய்தது. இதனால், இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காவிரி தொடர்பான தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கியிருந்ததோடு, இது தொடர்பான செயற்றிட்ட வரைவைச் சமர்ப்பிக்குமாறு, மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடகாவில் இடம்பெற்ற தேர்தலைக் காரணங்காட்டி, செயற்றிட்டத்தைச் சமர்ப்பிப்பதை, மத்திய அரசாங்கம் பிற்போட்டு வந்தது.
இந்நிலையிலேயே, இவ்வழக்கின் விசாரணை, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, செயற்றிட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது செயற்றிட்ட வரைவுக்கு மத்திய அமைச்சரவை அங்கிகாரம் அளித்த பின், வர்த்தமானியில் வெளியிடப்படும் என, மத்திய அரசாங்கம் தெரிவித்தது.
இந்த வரைவு குறித்து, தங்கள் தரப்பு வாதத்தைப் பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசாங்கத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்கீம்” என்பது காவிரி மேலாண்மை வாரியமா, குழுவா, அல்லது முகாமையா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என, மத்திய அரசாங்கம் விளக்கம் கோரியது.
இதையடுத்து மாநிலங்களுடன் செயற்றிட்ட வரைவைப் பகிர்ந்து, கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதியரசர்கள், வழக்கின் விசாரணையை நாளை (16) வரை ஒத்திவைத்தனர்.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago