Editorial / 2018 மே 18 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறுமா என்பது தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில், இச்சந்திப்பு நடக்காது என்றவாறான கருத்தை, வடகொரியா இன்னமும் தெரிவிக்கவில்லை என, ஐ.அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியாவில், முழுமையான அணுவாயுதமழிப்பை மேற்கொள்வதற்கு ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்துமாயின், எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் கலந்துகொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்குமென, வடகொரிய வெளிநாட்டு உப அமைச்சரொருவரை மேற்கோள்காட்டி, அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேட்ட போது, அவரது வழக்கமான, “பார்ப்போம்” என்பதே பதிலாகக் கிடைத்தது.
அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், “எங்களுக்கு அறிவிக்கப்படவே இல்லை. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். எதையும் நாங்கள் பார்க்கவில்லை. எதையும் நாங்கள் கேட்கவில்லை. என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். அது எதுவாக இருந்தாலும், அது தான்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, இச்சந்திப்புத் தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இச்சந்திப்பு இடம்பெற வேண்டுமென, வடகொரியாவின் பிரதான தோழமை நாடான சீனா கேட்டுக் கொண்டுள்ளது. “தீபகற்பத்தின் நிலைமை இலகுவாகியுள்ளது. அது, மகிழ்ச்சிப்பட வேண்டியது” என, சீன வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
34 minute ago
55 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
55 minute ago
9 hours ago