2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கில்கிட்-பால்டிஸ்தான் வாசிகளுக்கு டைமர்-பாஷா அணையின் அபாய மணி

Freelancer   / 2023 ஜனவரி 24 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் சிந்து நதியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரோலர் காம்பாக்ட் கொன்கிரீட் அணையான டயமர்-பாஷா அணை கில்கிட்-பால்டிஸ்தான் குடியிருப்பாளர்களை கவலையடைய செய்துள்ளது என்று உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றத்தின் அறிக்கை சுற்றுச்சூழல் சீரழிவு பிரச்சினையை மீண்டும் எழுப்புகிறது.

பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் பெரிய அணை மாதிரி ஸ்கேனரின் கீழ் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

இந்த அணை மிகவும் நில அதிர்வு வலயத்தில் அமைந்துள்ளதாலும் அதன் கட்டுமானத்தின் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாலும்  குடிமக்கள் மிகவும் கவலையடைகின்றனர்.

அதே நேரத்தில் அதன் நன்மைகள் பஞ்சாப் மற்றும் சிந்துவில் வசிக்கும் மக்களுக்குச் செல்லும் என்று அறிக்கை கூறுகிறது.

அணையின் அபிவிருத்திக்கு இஸ்லாமாபாத்  அழுத்தம் கொடுத்து வந்தாலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வெள்ளம், இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

அணையின் கட்டுமானம் கில்கிட் பால்டிஸ்தானின் குடிமக்களை பாதிக்கிறது. எவ்வாறாயினும், அரசாங்கம் உள்ளூர்வாசிகளின் கருத்தை புறக்கணித்துள்ளதுடன், நிலம் கையகப்படுத்துவதற்கு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தவறிவிட்டது. 

அணையின் விரிவாக்கத்துக்குப் பின்னர், சுமார் 3 இலட்சம் உள்ளூர் பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்து கில்கிட் நகரம் வரையிலான 200 கிலோ மீற்றர் பரப்பளவு நீரில் மூழ்கும் எனவும் இது பிராந்தியத்தின் வனவிலங்குகள் மற்றும் கனிம வளங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவிக்கிறது.

திட்டத்தின் உச்ச கட்டத்தில் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் டிரக்குகளை எல்லை வழியாக நகர்த்த வேண்டும். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், அது சரியான நேரத்தில் சரிசெய்ய முடியாத அளவுக்கு இப்பகுதியில் இயக்கத்தையும் மாசுபாட்டையும் அதிகரிக்கும்.

இப்பகுதியின் அழகிய சூழல் மாசுபட்டு, அழகியல் சிதைந்தால், கில்கிட் பால்டிஸ்தான் சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் பணம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இப்பகுதியில் வாழும் அரிய வகை விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து அப்பகுதியின் உள்ளூர் சமூகமும் கவலையடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளம் மற்றும் அடைமழைக்குப் பின்னர் பாகிஸ்தான் மிதக்க முடியாமல் திணறி வருவதாக சமீபத்தில் தெற்காசிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .