2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

குண்டுத் தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் பலி (update)

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக குறித்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.  

குறித்த தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பிரதம புகைப்பட பிடிப்பாளர் ஷா மராய் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்திற்கு முன்னதாக காபுலில் வாக்காளர் பதிவு நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X