2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

குண்டுத் தாக்குதல்; ஊடகவியலாளர் உள்ளிட்ட 21 பேர் பலி

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஷஷ்தாராக் பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், ஏ.ப்.பி (AFP) ஊடக நிறுவனத்தின் புகைப்பட பிடிப்பாளர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில்  உள்ளூர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின்  பொது சுகாதார அமைச்சின் பேச்சாளர் வாஹிட் மஜ்ரோ தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமைக் கோராத நிலையில், தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பிரதம புகைப்பட பிடிப்பாளர் ஷா மராய் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தை புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் மராய் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மராய் உயிரிழந்ததை, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவரும், காபுல் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X