Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 23 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் முன்னாள் இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது தாய் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 80 மற்றும் 90 வயதுக்குட்பட்டவர்களாவார். துப்பாகிச்சூடு நடத்திய நபரின் தாய், 10 வருடங்களாக அந்த இல்லத்தில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாருவர் நகரிலுள்ள குறித்த முதியோர் இல்லத்திற்கு திங்கட்கிழமை வந்த அந்நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.
இதில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேரும் இல்லப் பணியாளர் ஒருவரும் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர், அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை அருகிலுள்ள உணவகத்தில் வைத்து பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து பதிவு செய்யப்படாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் அதேவேளை, குறித்த நபர் 1973இல் பிறந்தவர் என்றும், குரோஷியாவில் கடந்த 1991-95-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் அவர் பங்கேற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago