2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குழந்தைகளுடன் 4 ஆண்டுகளாக தப்பியோடுபவரை திரும்பக் கோரிக்கை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் நான்காண்டுகளுக்கு முன்னர் தனது மூன்று பிள்ளைகளுடன் காணாமல் போன தந்தையின் குடும்பமானது அவரை வீட்டுக்கு வருமாறு கோரியுள்ளது.

பிள்ளைகளின் காப்புச் சண்டையொன்றில் 9, 10, 12 வயதான மூன்று பிள்ளைகளுடன் அவர்களின் குடும்ப வீட்டிலிருந்து 2021ஆம் ஆண்டு குறித்த நபர் காணாமல் போனதிலிருந்து தேசிய ரீதியிலான தேடுதல் இடம்பெற்று வருகிறது.

காணாமல் போன பின்னர் முதற்தடவையாக கடந்தாண்டு ஒக்டோபரில் இவர்கள் தென்பட்டிருந்தனர். பற்றையொன்றினூடாக ஏறிக் கொண்டிருந்தனர்.

நியூசிலாந்தின் வட தீவின் மேற்கு வைகடோ பிராந்தியத்தில் குறித்த நபர் மறைந்து முகாமிட்டுள்ளதாக பொலிஸார் நம்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X