2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குவைத் மன்னர் காலமானார்

Mayu   / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா தனது 86 வயதில் இன்று (16)காலமானார். உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் இன்னும் மன்னராட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா இருந்தார். 
இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் குவைத் மன்னராக பொறுப்பேற்றார்.

வயது முதிர்வு காரணமாக செய்க் நவாப் அல் அகமது அல் சபா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து செய்க் நவாப் தனது பெரும்பாலான  பொறுப்புகளை 2021ம் ஆண்டே பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்தநிலையில் வைத்தியசாலை வட்டாரங்கள் தரப்பில் செய்க் நவாப் நன்றாக உள்ளார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.  

அவருக்கு எந்த மாதிரியான உடல்நல பிரச்சனை உள்ளது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை.இதையடுத்து சிகிச்சை முடிந்து மன்னர் செய்க் நவாப் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

செய்க் நவால் அல் அகமது அல் சபா குவைத் மன்னராக குறுகிய காலம் அதாவது 3 ஆண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார்.
தற்போது செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமான நிலையில் குவைத்தின் அடுத்த மன்னராக அவரது  ச​கோதரர்  செய்க் மெஷல் அல் அகமது அல் சபா பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு வயது 83 ஆகும்.

இவர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்றி குவைத்தின் அதிகாரப்பூர்வ மன்னராக பட்டம் சூடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X