Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூலை 09 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீஜிங்கின் கடுமையான பூச்சிய கொவிட் கொள்கைகள் காரணமாக, சீனாவில் இருந்து பல வெளிநாட்டவர்கள் வெளியேறிவருகின்றனர்.
இந்தக் கொள்கையானது, மக்களை வாரக் கணக்கில் வீட்டுக்கு உள்ளேயே இருக்க கட்டாயப்படுத்துவதால், விநியோகச் சங்கிலி சிக்கல்கள் முதல் பன்னாட்டு நிறுவன மூடல்கள் வரை இடம்பெற்று வருகின்றன.
தேசிய உணர்வு தேவையற்ற எதிர்மறை நிலைகளுக்கு உணர்வை மாற்றியுள்ளதுடன், சீனா இனி வெளிநாட்டினரை விரும்புகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
கெயர்னியின் வருடாந்த மறுசீரமைப்பு ஆய்வில், சீனாவின் அமெரிக்க உற்பத்தி இறக்குமதியின் சதவீதம் 2018 இல் 66 சதவீதத்திலிருந்து 2021இல் 55 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இதன் ஒரு பகுதி நிச்சயமாக கொவிட்டினால் தூண்டப்பட்ட விநியோகச் சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களின் விளைவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பல உற்பத்தியாளர்கள் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு உற்பத்தியை தளவாடச் சிக்கல்களுக்காக மட்டும் மாற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள், சிறந்த வாய்ப்புகள் வெளிநாடுகளில் உள்ளன என்பதை உறுதியாக நம்பி வெளியேறியுள்ளன.
அதுமட்டுமின்றி, அமேசானின் கின்டில் வணிகம், எயார்பிஎன்பி மற்றும் யாகூ ஆகியவை சமீபத்திய சீனாவில் இருந்து வெளியேறியுள்ளன.
பீஜிங்கின் பூச்சிய கோவிட் கொள்கை சமீபத்தில் மாறியிருந்தாலும், 7-10 நாட்கள் தனிமைப்படுத்தலில் தேவைப்படும் என்பதுடன், நாடு முழுவதும் உள்ள கொள்கை முரண்பாடுகளும் பரந்த சீன பயணத்தை கடினமாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025