Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 25 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், டிசெம்பர் மாதத்தில் கைபர் பக்துன்க்வாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது என்று சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
நவம்பர் 28 அன்று தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (ரிரிபி) அமைப்பு பாகிஸ்தானுடன் அதன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டது.
சமீபத்திய தாக்குதல்களுக்குப் பின்னர், கைபர்-பக்துன்க்வா பொலிஸார் உஷார் நிலையில் உள்ளனர்.
பெஷாவர், தென் மாவட்டங்கள் மற்றும் மர்தான் பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்ததுடன், பஜூர், பெஷாவர், முகமண்ட், தேரா இஸ்மாயில் கான், டேங்க், பன்னு, கோஹாட் மற்றும் நவ்ஷேரா ஆகிய பகுதிகள் நவம்பர் மாதத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
"போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து, ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பஜூர், கைபர், மற்றும் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் ரிரிபிகுறிப்பிடத்தக்க படைகளை கட்டியெழுப்பியுள்ளது.
"சமீபத்திய வாரங்கள் மற்றும் மாதங்களில், சந்தேகத்துக்குரிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய ரிரிபி போராளிகள், கைபர்-பக்துன்க்வாவின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள உள்ளூர் மக்களுக்கு எதிராக அனைத்து வகையான வன்முறைக் குற்றங்களையும் செய்து வருகின்றனர் என்று சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் புதிய ,ராணுவ தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், நாட்டில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடையும் வரை பயங்கரவாதத்துக்கு எதிரான போரை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
கைபர் பக்துன்க்வாவின் குடிமக்கள் ரிரிபியின் மறுமலர்ச்சியால் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர் என்பதுடன், நாட்டின் பாதுகாப்புப் படையினரால் மக்கள் துரோகம் செய்ததாக உணர்கிறார்கள்.
அல் அரேபியா போஸ்ட்டின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது, பாகிஸ்தானில் தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவுபடுத்த பல பயங்கரவாத குழுக்களை ஊக்குவித்தது.
1970களின் பிற்பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஜிஹாதை வெளிப்படையாக ஆதரித்தாலும், அதன் பிரதேசம் மற்றும் குடிமக்கள் மீது தீவிரவாத மத சித்தாந்தத்தை ஆதரிப்பதன் சாத்தியமான விளைவுகளை அது குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளது என்றும் அல் அரேபியா போஸ்ட் அறிக்கை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதன் தோல்விகளில் இருந்து சர்வதேச கவனத்தைத் திசைதிருப்ப, பாகிஸ்தான் அதன் 'தலிபான் சார்பு' கதையை குறைத்து, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொள்கிறது என்று அறிக்கை மேலும் கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago