Freelancer / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேசிலில், சனிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், 37 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து, சனிக்கிழமை (21) மாலை, சால் பாலோ நகர் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 37 பயணிகள் பயணித்தனர்.
தியொபிலோ ஒடானி என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பஸ்ஸின் டயர் வெடித்தது.
இதனால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago