Editorial / 2018 மே 15 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சசிகலா, தனது சகோதரி அல்லர் எனவும், சசிகலா குடும்பத்தில் இருந்து விடுபட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன், இந்த நிலை எப்போது வருமென எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
சசிகலாவின் அக்கா மகனான டி.டி.வி. தினகரன், தனிக்கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து, அக்குடும்பத்துக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தானாக புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக திவாகரன் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரச்சினை வலுத்திருந்தது. தனது பெயரை, சகோதரி எனப் பயன்படுத்தக்கூடாது என, சசிகலா, வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களை நேற்று (14) சந்தித்துப் பேசிய திவாகரன், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, டி.டி.வி. தினகரன் மீதும் ஏனையோர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“எங்கள் குடும்பத்தை, மன்னார்குடி ‘மாபியா’ கும்பல் என்று சொல்கிறார்கள். என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனிமேல் அந்தப் பெயர் இருக்காது. சசிகலா எனது சகோதரி அல்லர். அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன். திவாகரன் என்ற பெயரை மட்டுமே விரும்புபவன்.
“என்னைப் பற்றி சசிகலாவிடம், டி.டி.வி.தினகரன் அவதூறு கூறி வருகிறார். சசிகலாவைத் தூண்டி விட்டு, என் மூலம் பழிவாங்க நினைக்கிறார். சசிகலாவைப் பழிவாங்க தினகரன் துடிக்கிறார். நான் தொடங்கிய ‘அம்மா அணி’ கட்சிப் பணி தொடரும். தவறுகளை நான் என்றும் தட்டிக் கேட்பேன். எங்களது கட்சியில் தீபா வந்தால் சேர்ப்பேன். அதைபோல் வேறு யாரும் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago