2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சடலங்களை விற்று வந்த பெண்ணால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 09 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 45 வயதான மேகன் ஹெஸ் என்ற பெண்ணொருவர் இறுதிச் சடங்குகளை நடத்தும் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.


இந்நிலையில் குறித்த இறுதிச் சடங்கு இல்லத்தில் இருந்து அண்மையில் அழுகிய நிலையில் 31 சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில் இது குறித்து அப்பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த பெண் ‘மரித்த மனித உடல்களை சேகரித்து அவற்றில் இருக்கும் தங்கப் பற்களை சுமார் 40,000 டொலர்களுக்கு விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.


அத்துடன் அச்  சடலங்களை   எரியூட்டுவதற்குப் பதிலாக   உடல் பாகங்களை தனித்தனியே பிரித்து மருத்துவ மாணவர்களுக்காக விற்பனை  செய்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. மேலும்  உறவினர்களுக்கு சாம்பலைத்  தருவதற்குப்  பதிலாக இரசாயனப்  பொருட்களை அளித்து ஏமாற்றி வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இறுதிச் சடங்கு இல்லத்துக்கு ஒரு சடலத்துக்கு 1000 டொலர்கள்   வரை கடனமாக வசூலித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் செய்த குற்றங்களின்  அடிப்படையில் 12 வருடங்கள் வரை அவருக்குச்  சிறை தண்டனை கிடைக்கலாம் எனக்  கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .