Editorial / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகோள ரீதியில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், மனித உரிமைகள் குழுக்களின் விமர்சனங்களுக்கு மத்தியில், தனது இணையல்லாத ஒருவருடன் உறவு கொள்ளல், ஆண் சமபாலுறவு ஆகியவற்று கல்லால் எறிந்து கொல்லல் உட்பட கடுமையான புதிய ஷரியா சட்டங்களை புரூனே நேற்று (03) அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின்னர் அதிகாரமிக்க சுல்தான் ஹஸனல் போக்கியாவால் ஆழப்படும் புரூனேயில் குறித்த கடுமையான தண்டனைச் சட்ட விதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
திருடர்களுக்கு கைகளையும், பாதங்களையும் துண்டித்தல் உள்ளடங்கலான குறித்த சட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சவூதி அரேபியா போன்ற பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளுடன், ஷரியா சட்ட விதித் தொகுப்ப்பொன்றை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற முதலாவது கிழக்கு அல்லது தென்கிழக்காசிய நாடாக புரூனே மாறியுள்ளது.
இதேவேளை, வன்புணர்வு, கொள்ளைக்கும் குறித்த சட்ட விதித் தொகுப்பின் கீழ் மரண தண்டனை வழங்கப்படுவதுடன், நபிகள் நாயகத்தை அவமதிப்புக்குள்ளாக்குவதற்கு மரண தண்டனை வழங்கப்படுவது முஸ்லிம் அல்லாதோருக்கும், முஸ்லிம்களுக்கும் பொருந்துவது போன்று பல புதிய சட்டங்கள் முஸ்லிம்கள் அல்லாதோருக்கும், முஸ்லிம்களுக்கும் பொருந்துகின்றன.
இந்நிலையில், இதை கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என ஐக்கிய நாடுகள் வர்ணித்துள்ள நிலையில், புரூனேயால் நிர்வகிக்கப்படும் ஹொட்டல்களைப் புறக்க்கணிக்குமாறு நடிகள் ஜோர்ஜ் குளூனி, பொப் பாடகர் எல்ட ஜோன் உள்ளிட்டவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, பலமான இஸ்லாமிய போதனைகள் பலமான வளரவேண்டும் என சுல்தான் ஹஸனல் போக்கியா தெரிவித்தபோதும் தண்டனைச் சட்ட விதித் தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருக்காதநிலையில், சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago