2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சாதாரண கைதிகளை போல் வேலை செய்ய உத்தரவு

Mithuna   / 2024 பெப்ரவரி 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான வழக்குகளில் அடுத்தடுத்து தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இம்ரான்கானுக்கு இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வழக்குகளில் இம்ரான்கானுடன் அவரது மனைவி புஷ்ரா பீவியும், முன்னாள் வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேஷியும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானும், குரேஷியும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புஷ்ரா பீவி, கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்ட இம்ரான்கானின் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அடியாலா சிறையில் இம்ரான்கானுக்கும், குரேஷிக்கும் உயர்மட்ட கைதிகள் என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாதாரண கைதிகளை போல அல்லாமல் சிறையில் அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் உயர்மட்ட கைதிகளாக உள்ள போதிலும் இம்ரான்கானும், குரேஷியும் சிறை வாளகத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என சிறை நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் இருவரும் எந்த மாதிரியான பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X