Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 15 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல் தானியங்கி பயணிகள் பஸ் சேவை, பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இவ் வகை பஸ் சேவைகள் ஸ்கொட்லாந்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த பஸ்சேவை 22 கிலோமீற்றர் தூரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும் ஒரே வழித்தடத்தில் இதே போல் ஐந்து பஸ்கள் இயக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸில் சாரதி இருப்பார், ஆனால் அவர் இயக்காமல் பஸ் தானாகவே இயங்கும். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் மாத்திரம் இருக்கையில் அமர்ந்திருக்கும் சாரதி இயக்குவார். மேலும், நடத்துநர் பயணச் சீட்டு வழங்குவது, பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பணிகளைக் கவனிப்பார்.
பஸ் சேவை நிறுவனத்தின் அதிகாரி பீட்டர் ஸ்டீவன் ஸ்டேஜ் கோச் கூறுகையில், ”தானியங்கி பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் முழுமையான தானியங்கி பஸ் சேவையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த பஸ்ஸில் ஆப்டிகல் கெமரா மற்றும் ராடார் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ் சாலையில் பயணிக்கும் போது, அப்டிகல் கேமரா மற்றும் ராடார் உதவியோடு பஸ் மற்ற வாகனங்களோடு மோதாமல் தடுக்கவும், சாலையில் ஜீப்ரா கிராசிங் போன்றவற்றில் மனிதர்கள் வரும் போது பஸ் நிறுத்தவும் முடியும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பமும் இந்த பஸ்ஸில் இருக்கிறது. இதன் மூலம் பஸ்ஸானது எங்குள்ளது? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், பஸ் நிறுத்தத்தின் விபரங்கள் உள்ளிட்டவை கையாளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago