Editorial / 2018 மே 07 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சிறுமியொருத்தி கடத்தப்பட்டு, தீமூட்டி எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, 14 ஆண்களை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தியாவில் சிறுமிகள் மீதான வன்புணர்வுகள் தொடர்பான செய்திகள், அண்மைக்காலத்தில் அதிகமாகப் பகிர்ந்துவரும் நிலையிலேயே, இச்சம்பவமும் பதிவாகியுள்ளது.
ஜார்க்கன்ட் மாநிலத்திலுள்ள அச்சிறுமியின் வீட்டார், திருமண வீடொன்றுக்காகச் சென்றிருந்த நிலையில், அவளவு வீட்டிலிருந்து, 16 வயதான இச்சிறுமி கடத்தப்பட்டாள் என, பொலிஸார் தெரிவித்தார். பின்னர், காட்டுப் பகுதியில் வைத்து, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கிராமத்தில் பஞ்சாயத்துச் சபையிடம், குடும்பத்தினர் முறையிட்ட போது, சந்தேகநபர்கள் இருவர், 100 தடவைகள் முட்டிக்கரணம் போட வேண்டுமெனவும், 50,000 இந்திய ரூபாய்களை அபராதமாகச் செலுத்த வேண்டுமெனவும், அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோபமடைந்த சந்தேகநபர்கள் இருவரும், அச்சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதோடு, அவர்களது வீட்டில் வைத்து, சிறுமியை உயிருடன் கொளுத்தியுள்ளனர் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதைத் தொடர்ந்தே, சம்பவம் தொடர்பாக 14 பேரை, நேற்று முன்தினம் (05) கைதுசெய்த பொலிஸார், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்னமும் தலைமறைவாக வாழ்வதால், அவரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடூரமான இச்சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைவதாகவும், இவ்விடயத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனவும், ஜார்க்கன்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் தெரிவித்தார்.
இந்தியாவில், பாலியல் குற்றங்கள் தொடர்பிலான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சட்டங்களை இறுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago