Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியதரை க்கடலில், அகதிகளின் உயிரிழப்புகளுக்கு எதிராக, பாடசாலை பஸ்ஸொன்றை பெற்றோல் ஊற்றி எரித்த குறித்த பஸ் ஓட்டுநரிடமிருந்து பணயக்கைதிகளாக இருந்த 51 சிறுவர்களை இத்தாலியப் பொலிஸார் நேற்றுமுன்தினம் மீட்டுள்ளனர்.
30 நிமிடங்களாக இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சில சிறுவர்கள் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில், பஸ் காரொன்றுடன் மோதிய போதும் சிறுவனொருவன் உதவிக்காக அழைத்திருக்க முடிந்த நிலையில், பொலிஸாரால் குறித்த சம்பவம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில், எவரும் மோசமாகக் காயமடைந்திருக்கவில்லை.
இந்நிலையில், “இதுவொரு அதிசயம். இது அழிவாக இருந்திருக்கும். பஸ்ஸைத் தடுத்து சிறுவர்களை வெளியேற்றி பொலிஸார் சிறப்பாகச் செயற்பட்டனர்” என இத்தாலியின் மிலனின் வழக்கறிஞர் பிரான்ஸெஸ் கோகிரேக்கோ தெரிவித்தார்.
அந்தவகையில், மிலனுக்கு அருகிலுள்ள வீதியொன்றில் பயணித்த காரொன்றும் பஸ்ஸும் எரிந்து வெற்றாகக் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், அகதிக்கொள்கைகளின் நீட்சிகளுக்கான கவனத்தைப்பெற, செனகலைப் பிறப்பிடமாகக் கொண்ட இத்தாலியப் பிரஜையான ஓட்டுநர் விரும்பியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வொன்றிலிருந்து வரும்போதே, கிறேமாவிலுள்ள இடைநிலைப் பாடசாலையின் இரண்டாம் தர மாணவர்கள் 51 பேரையும் மூன்று வயது வந்தோர் அனைவரையும் பணயக்கைதிகளாகதான் எடுத்துள்ளதாக, பாதையை திடீரென மாற்றிய ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி, கடுமையான அகதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன், மத்தியதரைக் கடலில் மீட்கப்படும் அகதிகளின் கப்பல்களுக்கு துறைமுகங்களை மூடுவதும் குறிப்பிடத்தக்கது.
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago