Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேற்கு யேமனிலுள்ள ஹஜாவின் குஷார் மாவட்டத்தில், 12 சிறுவர்கள், 10 பெண்கள் உட்பட பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சவூதி – ஐக்கிய அரபு அமீரகக் கூட்டணியின் வான் தாக்குதல்களில், வடமேற்கு யேமனிலுள்ள ஹஜாவின் குஷார் மாவட்டத்தில் 23பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல் மஸிராஹ் தொலைக்காட்சி வலையமைப்பு, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹூதிகளுக்கெதிராகத் திரள ஆரம்பித்த ஹஜூர் பழங்குடியினரின் சில உறுப்பினர்களை ஹூதிக்கள் கொன்றதாக, சவூதி அரேபியாவால் நிர்வகிக்கப்படும் அல்-அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மருத்துவ அறிக்கைகளை மேற்கோள்காட்டி, கடந்த இரண்டு நாட்களில் கொல்லப்பட்டவர்களில், 12 சிறுவர்களும், 10 பெண்களும் உள்ளடங்குவதாகவும் 30 பேரளவானோர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
முன்னேறிய ஹூதிப் போராளிகளை, ஹஜூர் பழங்குடியினப் போராளிகள் தடுத்த நிலையில், கடந்த சில வாரங்களாக குஷார் மாவட்டத்தில் மோதல் வெடித்திருந்தது.
யேமனின் பெரும்பான்மையான இடத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஹூதிக்கள், தற்போதைய யேமன் மோதலில் நடுநிலை வகிப்பதான ஆறாண்டு சமாதானத்தை மீறி, சவூதி அரேபியாவால் வழங்கப்படுகின்ற ஆயுதங்களை ஹஜூர் பழங்குடியினத்தவர்கள் சேகரிப்பதாகவும் குஷார் மாவட்டத்துக்குள் போராளிகளைக் கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், குஷார் பகுதியை நோக்கி மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதல் நடத்துகின்ற ஹூதிக்கள், இயற்கையான பாதுகாப்பு அரணாக இருக்கின்ற மலைப்பகுதியை கைப்பற்ற முயலுகின்றனர் என ஹஜூர் இனத்தவர்கள் தெரிவிக்கின்றனர்
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago