Freelancer / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் தொடர் கனமழையால் மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சுவர் இடிந்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 281 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவான கைதிகளை தேடும் பணிகளை பொலிஸார் முடுக்கிவிட்டனர்.
இதையடுத்து, 7 கைதிகள் மட்டும் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.S
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago