Editorial / 2020 ஜனவரி 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலுடனான எல்லைக்கருகிலுள்ள கிழக்கு பராகுவேயிலுள்ள சிறைச்சாலையொன்றிலிருந்து 75 சிறைக்கைதிகள் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பலர் சிறைக்காவலர்களால் பிரதான வாயில் வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டபோதும், அது நடவடிக்கையை மறைப்பதற்காக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தப்பித்தவர்களுள் டசின் கணக்கானோர் பிரேஸிலின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவான தலைநகரின் முதலாவது கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சா போலோவைத் தளமாகக் கொண்ட குறித்த குழுவானது ஏறத்தாழ 30,000 அங்கத்தவர்களைக் கொண்டிருப்பதுடன், போதைப்பொருள், ஆயுதக் கடத்தலில் பங்கெடுத்துள்ளது. இது, பிரேஸில், பராகுவே, பொலிவியா, கொலம்பியாவில் இயங்குகின்றது.
இந்நிலையில், பெட்ரோ ஜுவான் காபலெரோவிலுள்ள குறித்த சிறைச்சலை வளாகத்தை நேற்று சோதித்த பின்னர், மேற்குறித்த குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட முழுக் கட்டடமும் வெற்றிடமாகியிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு சிறைக்கூண்டில் 200 மணல் பைகள் காணப்பட்டுள்ளன. சுரங்கமூடாகத் தப்ப முயன்ற சிறைக்கைதியொருவர் கைப்பற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் இதில் பங்கெடுத்துள்ளது தெளிவாக உள்ளதாக உள்நாட்டமைச்சர் யூசிலிடஸ் அக்கெவெடோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைப் பணிப்பாளர் ஆண்டு விடுமுறையில் இருக்கும்போது கடந்த சில நாட்களாக சிறைக்கைதிகள் சிறிய குழுக்களாக தப்ப அனுமதிக்கப்பட்டதாக புலனாய்வுத் தகவல் மேற்கோள்காட்டுவதாக யூசிலிடஸ் அக்கெவெடோ மேலும் கூறியுள்ளார்.
19 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago
50 minute ago