2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சிலியில் காட்டுத்தீ : 46 பேர் பலி

Mayu   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் சனிக்கிழமை  திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், தீ விபத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எரிந்து சேதமடைந்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை என ​அந்நாட்டு அதிகாரிகள் ​தெரிவித்துள்ளனர்.

தீ பரவும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

https://youtu.be/4KboX-znsnU


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X