2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீன போலி ஆவணங்களால் பங்களாதேஷ் சந்திக்கும் இழப்பு

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில சீன நிறுவனங்கள், பங்களாதேஷில் போலி ஆவணங்களை அச்சடித்து விநியோகித்து, அரசின் திறைசேரிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் துறைமுக அதிகாரிகள், சீன நிறுவனங்களின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகித்தாலும், சிரேஷ்ட அதிகாரிகளின் 'அழுத்தம்' காரணமாக அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பங்களாதேஷ் லைவ் நியூஸ் தெரிவித்துள்ளது.

சமீப ஆண்டுகளில் போலி மற்றும் திருட்டுப் பொருட்களின் வர்த்தகம் 3.5% ஆக உயர்ந்துள்ளது என்றும் உலகளவில் 65% போலி ஏற்றுமதிகள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து வருவதாக உலக சுங்க அமைப்பின் மதிப்பீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் படி, போலி தயாரிப்புகளுக்கு பெயர் போன சீன நிறுவனங்கள், வர்த்தக முத்திரைகள் மற்றும் பதிப்புரிமைகளை மீறும் போலிப் பொருட்களை வர்த்தகம் செய்வது, நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் இழப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களுக்கு லாபத்தை உருவாக்குகிறது என தெரிவிக்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் உலகளாவிய வரி மோசடி காரணமாக பங்களாதேஷ் ஒவ்வொரு ஆண்டும் 143.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரி வருவாயில் இழக்கிறது என்று வரி நீதிக்கான உலகளாவிய கூட்டணி கூறுகிறது என்று பங்களாதேஷ் லைவ் நியூஸ் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் பாதுகாப்பு அச்சகக் கூட்டுத்தாபனத்தின் மூலம் பேண்ட்ரோல்கள் தயாரிக்கப்படுகின்றன. பேண்ட்ரோல் என்பது ஒரு குறுகிய, மெல்லிய ரிப்பன், இது பீடி மற்றும் சிகரெட் பக்கெட்டைச் சுற்றி சுற்றப்படுகிறது. 

சிகரெட்/பீடி நிறுவனங்கள், சிகரெட் வரி எனப்படும் வரி/வாட் செலுத்தி அவற்றை வாங்க வேண்டும். தேசிய பண சபை, இந்த பேண்ட்ரோல்களை விற்பதன் மூலம் வருவாயை ஈட்டுவதுடன், பண சபையிலிருந்து இவற்றை வாங்குவதற்கு வேறு யாருக்கும் அனுமதி இல்லை. 

சில பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிடமிருந்து அதைப் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஷெஷானில் அமைந்துள்ள ஒரு சீனநிறுவனம் சிட்டகொங்கை தளமாகக் கொண்ட அராஃபத் நிறுவனத்திற்கு போலி பேண்ட் ரோல்களை விற்றமை சிட்டகொங் சுங்க கட்டுப்பாட்டு பிரிவினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடவுச்சீட்டு, வாக்குப்பதிவு தாள்கள், தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு சான்றிதழ்கள் போன்ற பல்வேறு போலி ஆவணங்களை அச்சடித்ததாகவும் சீன நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சிட்டகொங்கில் சரக்கு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சீன நிறுவனமனது அதன் வலைத்தளத்தை அகற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .