Freelancer / 2022 மார்ச் 09 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டுக்கான எச்சரிக்கையான மற்றும் உள்நோக்கிய அரசாங்க அறிக்கையை சீனாவின் பிரதமர் லீ கெகியாங் வெளியிட்டார்.
தேசிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ கெகியாங், உக்ரைன் மீதான தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
மாறாக, ஸ்திரத்தன்மை மற்றும் அனர்த்த கட்டுப்பாட்டை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில் தேசிய மக்கள் காங்கிரஸின் ஆரம்பத்தில் வருடாந்த அரசாங்க பணி அறிக்கையை வழங்கப்பட்டது.
எங்களுக்கு முன்னால் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம் என்று கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகளிடம் பிரதமர் தெரிவித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் பொருளாதார மீட்சி இன்னும் நடுங்கும் நிலையில் இருப்பதாகவும், பொருட்களின் விலைகள் அதிகமாகவும், ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனாவின் வெளிச் சூழல் அதிகமாக நிலையற்றதாகவும், மோசமானதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டு, தேசிய காங்கிரஸுக்கு முன்னதாக, ஆளும் கட்சி அதன் தலைமைப் வரிசையை மாற்றியமைக்க முனையும் போது, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago