2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனாவின் அணு விரிவாக்கம் குறித்து அமெரிக்கா கவலை

Freelancer   / 2022 ஜனவரி 11 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா தனது அணு ஆயுத களஞ்சியத்தை வேகமாக விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இந்த அறிக்கை ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளதுடன், அமெரிக்காவுக்கு கவலையை எழுப்பியுள்ளது என்று தி நேஷனல் இன்ட்ரஸ்ட் தெரிவித்துள்ளது.

2021 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பீஜிங் இறுதியாக தனது அணு ஆயுத களஞ்சியங்களை வியத்தகு முறையில் விரிவுபடுத்துவதைக் குறிக்கிறது என்றும் மேற்குறிப்பிட்ட சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இது அணு ஆயுதங்கள் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட திறன் கொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை எதிர்கொள்ள அதிக ஆயுதங்களை தயாரிப்பதில் சீனா செயற்படுவதைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் விடுதலை இராணுவம் விண்வெளி அடிப்படையிலான அணுசக்தி விநியோக முறையை ஒக்டோபரில் பரிசோதித்த போதே மேற்குறித்த தகவல் கிடைத்துள்ளது.

வரலாற்று ரீதியாக, சீனா எப்போதும் ரஷ்யா அல்லது அமெரிக்காவை விட கணிசமான அளவு சிறிய அணு ஆயுத களஞ்சியங்களை வைத்திருக்கிறது. 

பீஜிங் பதிலடித் தாக்குதலை உறுதி செய்ய போதுமான அணுசக்தி தன்னிடம் இருப்பதாக கூறும் சீனா, அதை 'குறைந்தபட்ச தடுப்பு' என்றும் அழைக்கிறது.

மேலும், பீஜிங்கின் நோ ஃபர்ஸ்ட் யூஸ் கொள்கை, எதிரியின் முதல் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறையின் கணிப்பின்படி, ஒரு புதிய இயல்பு வெளிப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசின் அணுசக்தி விரிவாக்கத்தின் மிகை வேகம், 2027 ஆம் ஆண்டளவில் 700 அணு போர் முனைகளை வழங்கக்கூடியதாக சீன மக்கள் குடியரசுக்கு உதவும் என, அறிக்கை கூறுகிறது.

2020 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட வேகத்தையும் அளவையும் தாண்டி, 2030க்குள் குறைந்தது 1,000 போர் முனைகளை வைத்திருக்க சீனக் குடியரசு உத்தேசித்துள்ளது என்றும் அறியமுடிகிறது. 

இது 2020இல் பென்டகன் கணித்த வேகம் மற்றும் அளவை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .