2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முனைகிறது ஜி7 .

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தனது பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் மூலம் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் உதவிக்கரம் நீட்டும் வகையில், சீனா தன்னை காட்டிக்கொண்டாலும் அந்த நாடுகளை கடன் பொறிக்குள் இழுக்கவே முயன்றது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்கு பதிலடி வழங்கும் வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான மாற்றுத் திட்டமாக உட்கட்டமைப்பு திட்டங்களை ஜி 7 (அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைவே ஜி7) அமைப்பு அறிவித்துள்ளது.

பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் விளைவான சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம் குறித்து சீன முதலீடுகளைப் பெற்ற பல அரசுகள் விசனப்படுவதாகவும் முன்முயற்சிக்கு எதிரான ஏமாற்றத்தின் நிகழ்வுகளை பல்வேறு ஊடக வெளியீடுகள் எடுத்துக்காட்டுவதாகவும்  ஸ்லோவேனிய வெளியீடான போர்டல் பிளஸின் பத்தியாளர் வலேரியோ ஃபேப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பொதுவாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதற்கு இரையாகியுள்ளதாகவும் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதற்கு இருநாடுகளும் எடுத்துக்காட்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக பீஜிங்கின் உதவியைப் பெறுவது கொழும்பு மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நாடுகளுக்கும் ஒரு தவறான தெரிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் இரு நாடுகளும் சீனக் கடன் சுமையின் கீழ் ஆழமாக சிக்கியுள்ளன என்றும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். 

எனினும், உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட தன் நாட்டு மக்களுக்கு இறக்குமதி செய்யத் தவறியுள்ள இலங்கையின் நிலைமை மோசமாகி விட்டது.  

இலங்கை திவால் என்று அறிவித்ததுடன், அதன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மேலும், முன்னாள் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி திட்டங்களும் கடும் சுரண்டல்களை ஏற்படுத்தும் என்றும் பீஜிங் பெரும்பாலும் கடன்பெறும் நாடுகளில் உள்ளக நிர்வாகத்தில் தலையிடுகிறது என்றும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து உலகளாவிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான ஒன்றிணைவை (பிஜிஐஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
 
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் பாதகமான தாக்கத்தை மாற்றக்கூடிய அல்லது குறைந்தபட்சம் குறைக்கக்கூடிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான மாற்று வழிமுறையாக இது கருதப்படுகிறது.

பிஜிஐஐ மைய நோக்கம், வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்பு தேவைப்படும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதாகும்.

இந்த இலக்குகளைத் தவிர, காலநிலை மாற்றம், உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் உட்கட்டமைப்பை உருவாக்க உதவுதல் மற்றும் பாலின சமத்துவத்தை அடைவதையும் கவனத்தில் கொண்டுள்ளது.

ஜி7 ஆனது பிஜிஐஐ இன் கீழ் 2027 ஆம் ஆண்டுக்குள் 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது. எனினும் பிஜிஐஐ இன் கீழ் ஒரு பெரிய தனியார் மூலதனம் திரட்டப்படலாம் என்பதால், கிடைக்கும் உண்மையான தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த விலை, தளர்வான தரநிலைகள் மற்றும் அவசர காலக்கெடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சீனத் திட்டங்களைப் போலல்லாமல், பிஜிஐஐ முன்முயற்சியானது உலகளாவிய நலன் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஒரு பெரிய வெற்றியாக இருக்க முடியும், உலக அபிவிருத்தி இலட்சியங்களின் மையத்தில் மனித உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. 

சைனா டெய்லியின் படி, பிஜிஐஐ "தவறான நோக்கம்" மற்றும் "சாத்தியமற்றது" என்று சீனா விமர்சித்ததில் ஆச்சரியமில்லை ஏனெனில் சீனாவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக பிஜிஐஐ தொடங்கப்பட்டதாக பீஜிங் நம்புகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X