Editorial / 2019 மே 17 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவி மீது கடுமையான தடைகளை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் நேற்று முன்தினம் விதித்துள்ளது.
அந்தவகையில், ஹுவாவி தொழில்நுட்ப நிறுவனத்தையும் மற்றும் அதனுடன் இணைந்த 70 நிறுவனங்களையும் தமது பட்டியலில் சேர்ப்பதாக ஐக்கிய அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆக, குறித்த நகர்வானது, ஹுவாவி தொழில்நுட்ப நிறுவனமும் மற்றும் அதனுடன் இணைந்த 70 நிறுவனங்களும், ஐக்கி அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியில்லாமல், ஐக்கிய அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பொருட்கள், தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதை தடை செய்கிறது.
இந்நிலையில், வெளிநாட்டால் ஆளப்படும் நிறுவனங்களால் ஐக்கிய அமெரிக்க தொழில்நுட்பமானது, ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு அல்லது வெளிநாட்டு கொள்கை விருப்பங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் குறித்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவளித்ததாக ஐக்கிய அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் வில்புர் றொஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலொன்றாகக் கருதப்படும் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தொடர்பாடல்கள் சாதனத்தை ஐக்கிய அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நிறைவேற்று ஆணையில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்தார்.
மேற்குறித்த ஆணையானது குறிப்பாக எந்தவொரு நாட்டையோ அல்லது நிறுவனத்தையோ பெயரிடாதபோதும், ஹுவாவியை ஆபத்தொன்றாக முன்னர் அடையாளப்படுத்தியிருந்த ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள், அடுத்த தலைமுறை 5ஜி வலையமைப்புகளில் ஹுவாவி வலையமைப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாமென நட்புறவு நாடுகளைக் கோரியிருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு ஆபத்தொன்றை தமது தயாரிப்புகள் அளிப்பதை மறுத்துள்ள ஹுவாவி, ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடலிலீடுபடவும், தயாரிப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வரத் தயாரகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago