2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

சீனாவுக்கு கடன் வழங்க வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு கடன் வழங்கியுள்ள உலக வங்கிக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமெரிக்கா, சீனாவுக்கு கடன் வழங்க வேண்டாமெனவும் உலக வங்கியை எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு கடன் வழங்குவதை, உலக வங்கி நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள டிரம்ப், ”உலக வங்கி சீனாவுக்கு ஏன் கடன் வழங்க வேண்டும்? அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும்? கடன் வழங்குவதை நிறுத்துங்கள்.”  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X