2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனாவுடன் மோதல்: ஷியோமியை குற்றம் சாட்டும் இந்தியா

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அந்நியச் செலாவணிச் சட்டங்களை மீறியதாக சீனாவின் ஷியோமி கோர்பரேஷன் நிறுவனத்தை இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சீன நிறுவனத்துடனான இந்தியாவின் சமீபத்திய மோதலில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் உள்ளூர் பிரிவிடமிருந்து 55.51 பில்லியன் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் கீழ், ஷியோமி டெக்னோலஜி இந்தியாவின் வங்கிக் கணக்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்தியாவின் பணச்சலவை மோசடி தடுப்பு பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது தவறான தகவல்களை வங்கிகளுக்கு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2020 ஆம் ஆண்டில் இரு நாடுகளின் துருப்புக்கள் மோதியதில் இருந்து நாட்டுககுள் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் வழங்கும் ஷொப்பிங் சேவைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட திறன்பேசி பயன்பாடுகளை இந்தியா தடுப்புப் பட்டியலில் சேர்த்தது.  

நிறுவனம் அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது அல்லது அதன் சொத்துக்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைக்கு திரும்புமா என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

எனினும், எந்தவொரு தவறான புரிதலையும் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .