2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

சுடப்பட்டதையடுத்து 2 மாதங்களில் ஜனாதிபதி வேட்பாளர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரசார நிகழ்வொன்றில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலையில் சுடப்பட்ட கொலம்பிய செனட்டரும் ஜனாதிபதி வேட்பாளரான மிகேல் உரிபே, திங்கட்கிழமை (11) உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கொலையைத் திட்டமிடுவதற்கு மெடிலினில் சந்தித்தாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்த இருவர் உள்ளடங்கலாக ஆறு பேர் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூட்டை நடத்திய 15 வயதான சிறுவன் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டிருந்தார். அச்சிறுவன் கைது செய்யப்படும்போது உள்ளூர் போதைப்பொருள் கடத்தல்காரரொருவரால் தான் வாடகைக்கு அமர்த்தப்பட்டதாக கூவியிருந்தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .