Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூ கினியிலுள்ள புகன்வில்லி மக்கள், சுதந்திரத்துக்காக மிகப்பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
மேலும் சுயாதீனம் அல்லது முழுமையான சுதந்திரம் என இரண்டு தெரிவுகள் வாக்காளர்களுக்கு காணப்பட்ட நிலையில், 181,000 வாக்காளர்களில் ஏறத்தாழ 98 சதவீதம் பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
குறித்த பொதுஜன வாக்கெடுப்பானது பப்புவா நியூ கினி அரசாங்கத்தால் அங்கிகரிக்கக்கப்பட்டபோதும், இந்த முடிவானது சட்ட ரீதியான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை.
எவ்வாறெனினும், இப்பாரிய வெற்றியானது புகன்வில்லிக்கு சுதந்திரத்தை அளிக்க பப்புவா நியூ கினிக்கு அழுத்தத்தை வழங்கும்.
புகன்வில்லியானது ஏறத்தாழ 300,000 பேரைக் கொண்டுள்ள நிலையில், 206,731 பேர் பொதுஜன வாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். அதில், அளிக்கப்பட்ட 181,067 வாக்குகளில் 1276,928 சுதந்திரத்துக்காகவும், 3,043 மேலதிக சுயாட்சிக்காகவும், 1,096 வலிதற்றவையாகவும் காணப்பட்டிருந்தன.
மேற்குறித்த முடிவுகள், புகன்வில்லி பொதுஜனவாக்கெடுப்பு ஆணைக்குழுவின் தலைவர் பேர்ட்டி அஹ்ரெனால், புகா நகரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
19 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago
50 minute ago