Freelancer / 2022 ஜூன் 15 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று, கடந்த 12 ஆம் திகதி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுவாகின் துறைமுகத்தில் இருந்து 15,800 ஆடுகளை ஏற்றிக் கொண்டு சவுதி அரேபியா நோக்கிப் பயணித்த 'பத்ர்1' என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் குறித்த கப்பலில் பயணித்த பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 1000 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான சுமையை ஏற்றிச் சென்றமையே இவ்விபத்துக்கான காரணமெனத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .