Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடான் நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இதுபற்றி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவல்கள் அமைப்பு கூறும்போது, சூடான் மோதலால் 9 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சூடானுக்கு உள்ளேயும், வெளியேயும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். 2.5 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை, சூடானில் இருந்து தெற்கு சூடானுக்கு 5.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். டிசெம்பர் மத்தியில் சூடானில் மோதல் அதிகரித்ததும், அகதிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த மோதல் பற்றி சேவ் தி சில்டிரன் என்ற சர்வதேச தொண்டு அமைப்பு வெளியிட்ட செய்தியில், “சூடான் அகதிகள் பலர் தங்குவதற்கான முகாம்கள் அமைந்த அபெய் சிறப்பு நிர்வாக பகுதியில் கடந்த 2 வாரங்களில் 3 குழந்தைகள் உள்பட 75 பேர் உயிரிழந்துள்ளனர். 2,200 பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.” என தெரிவித்துள்ளது.
20 minute ago
26 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago