2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சூட்கேஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல மொடல் அழகி

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினை  ‘சைக்கோ‘ என விமர்சித்த பிரபல மொடல் அழகியொருவர் சூட்கேசில் இருந்து  சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம்  உலகளவில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் கிரெட்டா வெட்லர் (Gretta Vedler) என்ற 23 வயதான மொடல் அழகியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை  ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ (Psychopath) என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரெட்டா வெட்லரின் சடலம்  அண்மையில் கார் ஒன்றில் டிக்கியொன்றில்  சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பொலிஸார் அவரது காதலரனான டிமிட்ரி கொரோவிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு திடுக்கிடும்  தகவல் வெளியானது.

அதில், ‘நான்தான் கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொன்றேன்’ என அவர் ஒப்புக்கொண்டதாகவும், சடலத்தை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்ததாகவும், இறந்தது தெரியக்கூடாது என்பதற்காக அவரின் சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X