Freelancer / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், தென்காசி மாவட்டம் - சுரண்டையைச் சேர்ந்த இளைஞன், சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இன்று (19) அதிகாலை 1.30 மணி (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி) அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து, பணத்தை கொள்ளையடித்து விட்டு, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
22 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
37 minute ago