Editorial / 2019 மார்ச் 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஸாம்பிக், சிம்பாப்வேயைத் தாக்கிய இடாய் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300ஐ, நேற்று முன்தினம் தாண்டியுள்ளது.
200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஏறத்தாழ 350,000 அளவானோர் ஆபத்திலிருப்பதாகவும் மொஸாம்பிக் ஜனாதிபதி பிலிப் நையுசி, நேற்று முன்தினம் அறிவித்துள்ள நிலையில், ஏறத்தாழ 100 பேர் இறந்துள்ளதாக சிம்பாப்வே அரசாங்கம் தெரிவித்துள்ளபோதும் அந்த எண்ணிக்கை மும்மடங்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இடாய் சூறாவளியால் மலாவியில் மனிதாபிமான நெருக்கடியொன்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள், ஏறத்தாழ மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80,000க்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளது.
இடாய் சூறாவளி தாக்கிய நான்கு நாட்களுக்குப் பின்னரும் மத்திய மொஸாம்பிக்கில், கூரைகளிலும் மர உச்சிகளிலுள்ள உயிர் தப்பித்தவர்களை படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவசரகால அணிகள் மீட்கின்றன. மொஸாம்பிக்கினதும், தென்னாபிரிக்காவினதும் வான் படையினர், ஆகாய மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்ற நிலையில், மூன்று ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவிலிருந்து 34 பேரை மீட்டுள்ளதாக றெஸ்கியூ சவுத் அஃப்ரிக்கா என்ற அரசசார்பற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மொஸாம்பிக்கில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெய்ராவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், தேசிய அவரசகாலநிலையொன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் மூன்று நாள்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் பிலிப் நையுசி கூறியுள்ளார்.
இதேவேளை, சிம்பாப்வேயில் குறைந்தது 217 பேரைக் காணவில்லை என்றும் 44 பேர் மீட்க முடியாமல் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
37 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago