2025 ஜூலை 05, சனிக்கிழமை

செவ்வாயில் பாறை கண்டுபிடிப்பு

Freelancer   / 2024 ஜூலை 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மேற்கொண்ட ஆய்வொன்றில், செவ்வாய் கிரகத்தில் பாறை உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி நாசா விண்கலமொன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட 'பெர்சிவியரன்ஸ்'  என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை அமைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான 'நெரெட்வா வாலிஸ்'இன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவப் பாறையை பெர்சிவியரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .