Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றில் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை தவிர்த்து வேறு எந்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யக்கூடாது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago