2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் முன்னிலையில் ஜோ படைன்

Editorial   / 2019 ஜூன் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா மாநில வாக்காளர்களிடையேயான ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில், அந்நாட்டின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் முன்னிலையில் இருக்கின்ற நிலையில், கடுமையான இரண்டாமிடத்துக்கான போட்டியில் அந்நாட்டின் செனட்டர்களான பேர்ணி சாண்டர்ஸ், எலிஸபத் வரன், மேயர் பீற் புடிகிக் ஆகியோர் காணப்படுகின்றனர் என நேற்று முன்தினம் வெளியான சி.என்.என் உள்ளடங்கிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஐயோவா அடுத்தாண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கும்போது முதற் தெரிவாக 24 சதவீதமானோரின் ஆதரவுடன் ஜோ பைடன் காணப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளதோடு, 16 சதவீதமானோரின் ஆதரவை பேர்ணி சாண்டர்ஸ் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, எலிஸபெத் வரன், பீற் புடிகிக் ஆகியோர் 15, 14 சதவீதமான ஆதரவை முறையே பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், வேறெந்த வேட்பாளரும் இரட்டை எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், செனட்டர் கமலா ஹரிஸ் ஏழு சதவீதமான ஆதரவையும், செனட்டர் அமி க்ளோபுச்சர், பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினரான பெட்டோ ஓ ருர்கே ஆகியோர் இரண்டு சதவீதமான ஆதரவையும், ஏழு வேட்பாளர்கள் ஒரு சதவீதமான ஆதரவைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X