Editorial / 2018 மே 10 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அப்பதவிக்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என, ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர், நேற்று (09) விமர்சித்துள்ளார். ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்ததைத் தொடர்ந்தே, சபாநாயகரின் இவ்விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதித்துறையின் இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் அலி லரிஜனி, “விடயங்கள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உளத் திறன், ட்ரம்ப்பிடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
அத்தோடு, ஈரானின் அணுசக்தி அமைப்பு, யுரேனியம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தாரென, ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.
நேற்றைய அமர்வின் போது, ஈரான் ஒப்பந்தத்தின் பிரதியொன்றை, நாடாளுமன்றத்துக்குள் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரித்ததோடு, “அமெரிக்காவுக்கு மரணம்” எனச் சத்தமிட்டனர் என, ஈரானின் செய்தி முகவரகமொன்று தெரிவித்தது.

கருத்துத் தெரிவித்த, ஈரான் இராணுவத்தின் பணியாட்தொகுதிப் பிரதானியான ஜெனரல் மொஹமட் பகேரி, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டிய தேவை, ஈரானுக்கு இருந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டதோடு, “ஆனால், திமிர் பிடித்த அந்த நாடு (ஐ.அமெரிக்கா), அதன் கையெழுத்தின்படி நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
34 minute ago
55 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
55 minute ago
9 hours ago