S.Renuka / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் ஒரு வாரத்துக்குள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், 98 அடி உயர சுனாமி ஏற்படும் ஆபத்தும் உள்ளது என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின் வட கடலோரப் பகுதிகளான ஹொக்காய்டோ, ஹொன்ஷு தீவுகளில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல சுனாமி எதுவும் வரவில்லை. ஆனால், நிலநடுக்கத்தால் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் மட்டுமேஆன நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், பயங்கரமான சுனாமி பேரலைத் தாக்குதல் நிகழலாம் என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படும்போது, 98 அடி உயர சுனாமி அலைகள் ஜப்பானின் கடலில் எழ வாய்ப்பிருப்பதாகவும், இதனால் 2 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி ஏற்பட்டு 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுனாமி பேரலை காரணமாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
8 hours ago