2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஜப்பானை தாக்கியது சுனாமி

Freelancer   / 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .