2025 நவம்பர் 05, புதன்கிழமை

’ஜெ-க்கு சிறப்புச் சிகிச்சை’

Editorial   / 2019 மே 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தனியார் வைத்தியசாலை நிர்வாகிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சிறப்பான சிகிச்சைகளே அளிக்கப்பட்டதாக, ​குறித்த வைத்தியசாலையில்ன குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், இது குறித்த விசாரணைகளின் வாக்குமூலத்தை தவறாக பதிவுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட காலங்களில் நான்கு வாரத்துக்கு மேலாக, தான் உடனிருந்ததாகவும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளின் போது நுரையீரல், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், வாக்குமூலத்தின் போது, 15 விநாடிகள் என்பதற்கு பதிலாக 15 நிமிடங்கள் என தவறாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதேவேளை, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளின் உண்மை தன்மை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்கக் கோரி, வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X