Editorial / 2019 ஜூன் 03 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர், வெளிநாடுகளில் துாதராக பணியாற்றியவரான ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளதால் சீனா, பாகிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட ஜெய்சங்கர், சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்தியாவின் துாதராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். சீனாவுடன், டோக்லாம் பிரச்சினை, பாகிஸ்தானுடன் லடாக் மற்றும் தேப்சாங் போன்ற விவகாரங்களை, மிகவும் திறமையுடனும், சாதுரியத்துடனும் கையாண்டவர்.
இந்நிலையில், ஏற்கெனவே இதுபோன்ற வெளியுறவுத்துறை விவகாரங்களில் அனுபவம் பெற்றவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகி இருப்பதால், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான, போர்த்தந்திர நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு, புதுடில்லி அரசுத்துறை வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கத்துடன் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் பிரச்சினை, காஷ்மிர் பிரச்சினை, சமீபத்தில் நடந்த புல்வாமா பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பாலக்கோட்டில் இந்தியா பதிலடி, அபிநந்தன் கைது, விடுதலை போன்ற முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோல, சீன, அமெரிக்கா இடையில் வர்த்தகப்போரும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஆசியக்கடலில் சீனாவின் பட்டுப்பாதை, தென்சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்ற முக்கிய பிரசசினைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago
1 hours ago