2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தத் தடை

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெலிகிராம் செயலிக்குத் தடை விதிப்பதாக பிரேசில் அரசு  அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

பிரேசிலில் அரச அதிகாரிகளுக்கு  ஒத்துழைக்க மறுத்தமை மற்றும் தவறாகப்  பரப்பப்படும் தகவல்களைக்  கட்டுப்படுத்தத் தவறியமை ஆகிய குற்றச் சாட்டுக்கள்  டெலிகிராம்  நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த  வழக்கை விசாரித்த  அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அச் செயலிக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இவ் அறிவிப்பானது பிரேசில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X