Freelancer / 2024 ஜூன் 09 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் டொறன்டோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா தொற்று தொடர்பில், இதுவரையில் குறித்த பக்றீரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம், குறித்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரம், ஏனைய நாடுகளில் இந்த நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.S
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago