Editorial / 2018 மே 10 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புத் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் காலத்திலேயே, இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
ஜனாதிபதிப் பதவிக் காலம் முடிந்தது முதல், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான நேரடி விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்து பெருமளவுக்குத் தவிர்த்திருந்த ஒபாமா, இவ்விடயத்தில் தனது நேரடியான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“அணுவாயுதங்களின் பரவலுக்கான வாய்ப்பு அல்லது மத்திய கிழக்கில் மேலும் அழிவுதரக்கூடிய போர் ஆகியவற்றை விட, ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பில் முக்கியமான விடயங்கள் குறைவாகவே உள்ளன. அதனால் தான், இணைந்த முழுமையான திட்ட நடவடிக்கையை (ஈரான் ஒப்பந்தம்), ஐ.அமெரிக்கா பேரம்பேசியது” என அவர் குறிப்பிட்டார்.
இவ்வொப்பந்தத்தால் பயன் காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஐ.அமெரிக்காவின் ஐரோப்பியத் தோழமை நாடுகளும் சுயாதீன நிபுணர்களும் ஐ.அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும், இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஈரானின் அணுவாயுதத் திறனைப் பின்னோக்கி அழைத்துச் செல்வதற்கு, இவ்வொப்பந்தம் உதவியிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், அதனால், ஐ.அமெரிக்காவின் நலன்களையும் கருத்திற்கொண்டதாகவே இது அமையுமென்றார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பால் விடுக்கப்பட்ட அறிவிப்பை, “தவறாக வழிநடத்தப்பட்ட அறிவிப்பு” என்று குறிப்பிட்ட அவர், இன்னொரு தடவை, “ ஈரான் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு, பாரதூரமான தவறு” என்றும் குறிப்பிட்டர்ர.
இவ்வொப்பந்தம் தொடர்பாக, தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், அவை ஒவ்வொன்று தொடர்பாகவும் விளக்கத்தை வழங்கிய ஒபாமா, இவ்விடயம் தொடர்பாக, ஐ.அமெரிக்க மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago