Editorial / 2018 மே 03 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசாரணையாளர்களோடு ஒத்துழைக்க மறுத்தால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்படுமென, விசாரணையாளர்கள் எச்சரித்தனர் என, ஜனாதிபதியின் முன்னாள் வழக்கறிஞர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் வழக்கறிஞராக இருந்து, சில வாரங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய, ஜோன் டோவ்ட் இவ்விடயத்தை வெளிப்படுத்தியதோடு, மார்ச் மாதம் நடந்த சந்திப்பொன்றிலேயே, விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரின் விசாரணைக் குழுவினர், இவ்வெச்சரிக்கையை வழங்கினர் எனவும் குறிப்பிட்டார்.
தமது விசாரணையின் ஓர் அங்கமாக, ஜனாதிபதி ட்ரம்ப்பிடமிருந்து வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு, மல்லரின் குழு முயன்று வருகிறது. அது தொடர்பான பேரம்பேசல்களில், ஜனாதிபதியின் வழக்கறிஞர் குழாமுடன் அக்குழு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களில், மத்திய விசாரணைக் குழுவொன்றுடன் உரையாட வேண்டிய தேவை இல்லை என, ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் போதே, இவ்வெச்சரிக்கை, மல்லர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியுடன் இவ்வாறு செயற்பட முடியாது என, தாம் பதில் வழங்கியதாக, ஜோன் டோவ்ட் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடல் இடம்பெற்றுச் சில வாரங்களில், தனது பதவியிலிருந்து விலகுவதாக, டோவ்ட் அறிவித்திருந்தார்.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago