Freelancer / 2022 மார்ச் 07 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து இந்திய நகரங்களிலிருந்தும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியப் பயணிகள், தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையினூடாக, தனிமைப்படுத்தல் தேவையின்றி சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவர் என, சிங்கப்பூர் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை டெல்லி, மும்பை மற்றும் சென்னையிலிருந்து வரும் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அறிவிப்பின்படி, இந்தியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தனிமைப்படுத்தப்படாத பயணத்துக்கு, தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையைப் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 16ஆம் திகதி முதல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை சேவைகளாக மாற்றுவதாக சிங்கப்பூர் எயார்லைன்ஸ், வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நாளாந்த விமானங்கள் சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தொடர்ந்து இயக்கப்படும், மார்ச் 16 முதல் அஹமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தாவிலிருந்து, தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைக்கமைய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை சேவைகளில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் தங்கள் விசா விண்ணப்பங்களுக்கு முன்னர், தடுப்பூசி போடப்பட்டமைக்கான பயண அனுமதியை வழங்கி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை வந்தடைந்ததும், பயணிகள் வந்தடைந்த 24 மணி நேரத்துக்குள் விரைவான சோதனை மையத்தில் பரிசோதனை எதிர்மறையானதாக பெறப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தல் இல்லாமல் தங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago