Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்கா தடைகளை நீக்கி, அது கடந்தாண்டு விலகிய 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்துக்குத் திரும்பினால் ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுக்களை நடாத்த ஈரான் தயாராகவுள்ளதென ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றொஹானி தெரிவித்துள்ளார்.
தாங்கள் எப்போதும் பேச்சுக்களை நம்புவதாக நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் தெரிவித்த ஜனாதிபதி றொஹானி, ஐக்கிய அமெரிக்கா தடைகளை நீக்கி, திணிக்கப்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அணு ஒப்பந்தத்துக்குத் திரும்பினால், ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுக்களை நடாத்தே இன்றே, இப்போதே, எங்கும் பேச்சுவார்த்தைகளைத் நடாத்த தாங்கள் தயாராகவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஈரானுக்கும் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனாவுக்குமிடையிலான அணு ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகி, ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தது முதல் ஈரானுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
ஈரானின் பிரதான வெளிநாட்டு வருவாயான மசகெண்ணெய் ஏற்றுமதியை இலக்கு வைத்த ஐக்கிய அமெரிக்க தடைகளுக்கு பதிலீடாக, அணு ஒப்பந்தத்திலிருந்து ஏற்றுக் கொண்டதிலிருந்து பின்வாங்கப்போவதாக இவ்வாண்டு மே மாதம் ஈரான் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி முழுமையான ஒழுகுமாறான பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியாவின் எச்சரிக்கைக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்ட குறைந்தளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பின் அளவைக் கூட்டியுள்ளதுடன், ஒப்பந்தத்தின் கீழ் இணங்கப்பட்ட 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்ட ஈரான் ஆரம்பித்துள்ளது.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago